ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தம்: தமிழக அரசு அதிரடி

ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (11:43 IST)
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மூடப்பட்ட நிலையில் சமீபத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்காக உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் திறக்கப்பட்டது 
 
ஆனால் அதே நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு மூன்று மாதங்கள் மட்டுமே அனுமதி என்றும் அந்த மூன்று மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் தயாரித்து வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது
 
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது அடுத்து தொடர்ந்து செயல்பட தமிழக அரசு அனுமதி மறுத்தது. தற்போது தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்றும் அதனால் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியது.
 
ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அரசு அனுமதி மறுத்த நிலையில் இன்று தூத்துக்குடி ஆலைக்கு செல்லும் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்