தேமுதிக பிரச்சாரத்திற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு!

ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (12:18 IST)
மத்திய சென்னையில் தேமுதிக வேட்பாளர் பிரச்சாரத்திற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
தே.மு.தி.க. வேட்பாளர் நவீந்திரன் அரும்பாக்கம் ஆசாத் நகரில் தேர்தல் பிரசாரம் செய்த போது இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 
 
பாரதீய ஜனதா கட்சியுடன் தே.மு.தி.க. கூட்டணி வைத்திருப்பதற்கு அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்