திருச்சியில் மாணவர்களுக்கு போதை பொருட்களை சப்ளை செய்து வந்த 4 பேரை தனிப்படை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்கள் மாணவர்களை குறி வைத்து போதை பொருட்களை விற்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து, அந்த கும்பலை பிடிக்க அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
போலிசாருக்கு அந்த கும்பலின் போன் நம்பர் கிடைத்ததையடுத்து அவர்களை மாணவர்கள் அழைப்பது போல் அழைத்து போதை பொருள் கேட்டனர். இதனையடுத்து திருச்சி வந்த அந்த கும்பலை போலிசார் அரியமங்கலம் லட்சுமிபுரம் அருகே மடக்கி பிடித்து கைது செய்தனர்.
ஈரோடு பெருந்துறையை சேர்ந்த சந்திரமோகன், நாமக்கல் குமாரபாளையத்தை சேர்ந்த சந்திர குமார், திருச்செங்கோட்டை சேர்ந்த திருவேங்கடம், முரளிதரன். இவர்களிடம் இருந்து 2 கிலோ போதை பொருள் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட இவர்கள் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலிசார் சிறையில் அடைத்தனர்.