தேசியக்கொடி வைத்திருந்த இளைஞருக்கு போலீஸ் தர்ம அடி: அதிர்ச்சி வீடியோ!

செவ்வாய், 24 ஜனவரி 2017 (12:57 IST)
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடி வந்தவர்களை தமிழகம் முழுவதும் நேற்று காவல்துறை கலைத்தது. சில இடங்களில் அமைதிப் பேச்சுவார்த்தை மூலமும், பெரும்பாலான இடங்களில் தடியடி மூலமாகவும் கலைத்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.


 
 
அறவழியில் அமைதியாக போராடிய மாணவர்கள் மீது ஏன் வன்முறையை கட்டுவிழ்த்து விட்டது காவல்துறை என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். இந்நிலையில் தேசியக்கொடி வைத்திருந்த இளைஞர் ஒருவர் போலீசால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்.
 
சில தினங்களுக்கு முன்னர் நடிகர் சிம்பு, போலீசார் உங்களை தாக்க வந்தால் தேசியக்கொடியை அணிந்து கொள்ளுங்கள், தேசிய கீதத்தை பாடுங்கள் அடிக்க மாட்டார்கள் என யோசனை கூறியிருந்தார்.

 

 
 
இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் தன்னை போலீசார் தாக்க வருவதை பார்த்து அவர் தேசியக்கொடியை அணிந்துள்ளார். இதனை பார்த்த போலீசார் அந்த இளைஞரை இங்கே வா என கூப்பிட்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.
 
தமிழ்நாட்டுக்காக போராட வந்த தன்னுடைய நிலமையை பாருங்கள் என அந்த இளைஞர் குமுறியுள்ளார். தேசியக்கொடியை பயன்படுத்தியும் தான் தாக்கப்பட்டதாக கண்ணீர் மல்க கூறியுள்ளார் அவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்