ஒருதலைக் காதல் தொடர்பாக, பல பெண்கள் தமிழகத்தில் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில், ஒருதலைக் காதலுக்கு விடை கொடுங்கள் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மைக் காலத்தில் இது ஐந்தாவது பலி. சென்னையில் சுவாதி, விழுப்புரத்தில் நவீனா, கரூரில் சோனாலி, தூத்துக்குடியில் பிரான்சினா, தற்போது விருதாசலத்தில் புஷ்பலதா.
இந்த ஐந்து பெண்களின் மரணத்திற்குப் பிறகாவது ஒருதலைக் காதலுக்கு தற்கால இளைஞர்கள் விடுதலை கொடுப்பார்கள், கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். பலியான பெண்களின் குடும்பங்களுக்கு அரசினர் உரிய உதவித் தொகையை விரைவில் அளிக்கவேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.