வேறு பெண்ணுடன் தொடர்பு - அடையாற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை

செவ்வாய், 6 மார்ச் 2018 (13:55 IST)
கணவரின் கள்ளத்தொடர்பு மற்றும் வரதட்சணை கொடுமை காரணமாக சென்னையை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை பாரிமுனை பகுதியில் வசித்து வரும் செல்வரங்கம் என்பவரின் மகள் ஜீவிதா(25). இவர் வானகரம் பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், ஆவடியை சேர்ந்த ரோஸ் என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தற்போது அவர்களுக்கு வைசாலி என்ற ஒரு வயது பெண் குழந்தை உள்ளது.
 
கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிந்து வரும் ரோஸுக்கும், அவரது சக பெண் ஊழியர் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்தது ஜீவிதாற்கு தெரிய வர அவரது வாழ்வில் புயல் வீச தொடங்கியது. இது தொடர்பாக அவருக்கும், ரோஸுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. 
 
அதன் காரணமாக ரோஸும், அவரது குடும்பத்தினரும் ஜீவிதாவை வரதட்சணை கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கீதா இதுபற்றி தனது பெற்றோரிடம் முறையிட்டார். அதன்பின் இரு குடும்பத்தினரும் சமசரம் ஆகி ஜீவிதாவை ரோஸுடன் அனுப்பி வைத்தனர்.
 
அந்நிலையில், சமீபத்தில் ரோஸுக்கும், ஜீவிதாவிற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ரூ.20 லட்சம் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய ரோஸ், ஜூவிதாவை தகாத வார்த்தைகளால் திட்டிய, அடித்து உதைத்துள்ளார். எனவே, கடந்த சனிக்கிழமை தோழியின் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் ரயிலில் ஜீவிதா ஏறியுள்ளார். அப்போது, கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து தனது தாயிடம் அவர் கூறி அழுதுள்ளார். மேலும், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறும் கூறிவிட்டு செல்போணை அணைத்து வைத்துவிட்டார்.

அதன்பின்  கிண்டியிலிருந்து சைதாப்பேட்டை செல்லும் வழியில், அடையாறு ஆற்றின் மீது ரயில் சென்ற போது திடீரென ஜீவிதா கீழே குதித்தார். இதைக்கண்ட சக பயணிகள் அலறினர். மேலும், ரயில் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். ஆனாலும், அதற்குள் நீரில் மூழ்கி ஜீவிதா இறந்துவிட்டார்.அதன்பின் தீயணைப்புத் துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரோஸ் மற்றும் அவரின் குடும்பத்தினர் நடவடிக்கை எடுக்கும் படியும், குழந்தையை தங்களிடம் ஒப்படைக்கும் படியும் ஜீவிதாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
குழந்தை வைசாலிக்கு கடந்த 5ம் தேதி முதல் பிறந்த நாள் ஆகும். ஆனால், அதைக் கொண்டாடக் கூட ஜீவிதா இல்லை என்பது அவரது குடும்பதினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்