தீபாவளிக்கு மது விற்பனை எவ்வளவு தெரியுமா?

திங்கள், 31 அக்டோபர் 2016 (11:54 IST)
தீபாவளியையொட்டி டாஸ்மாக் நிறுவனத்திற்கு 2 நாட்களில் ரூ.243 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
 

 
தமிழகத்தில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளின் மூலம் தினசரி சராசரியாக, 68 கோடி ரூபாய் வருமானம் கிடைத்து வருகிறது. இதுவே ஞாயிறு கிழமைகளில், 95 கோடி ரூபாய் வரை மதுபானங்கள் விற்கும்.
 
இந்நிலையில், தீபாவளி பண்டிகையான வெள்ளி மற்றும் சனி என கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 243 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் டாஸ்மாக் கடைகளில் விற்றுத் தீர்ந்துள்ளன. அதாவது கடந்த 28ஆம் தேதி மட்டும் 108 கோடி ரூபாயும், 29ஆம் தேதி 135 கோடி ரூபாயும் மது விற்பனையாகியுள்ளது.
 
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 11.2 சதவீதம் கூடுதல் என்று டாஸ்மாக் தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்