சென்னையில் 12-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு.. எப்போது தெரியுமா?

Mahendran

ஞாயிறு, 28 ஜனவரி 2024 (11:15 IST)
சென்னையில் அடுத்த ஆண்டு மே மாதம் உலகத் தமிழ் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
12வது உலகத் தமிழ் மாநாடு 2025 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறும் என சென்னையில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் உலகத்தமிழ் ஆராய்ச்சி இந்திய கலைத் தலைவர் நிர்மலா ஐஏஎஸ் அறிவித்துள்ளார்.  
 
இந்த மாநாட்டிற்கு வெளி மாநிலங்களில் வெளிநாடுகளில் வசிக்கும் 1000க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், கட்டுரையாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அழைக்கப்படுவார்கள் என்றும் பாரம்பரிய நவீன ஓவியங்கள் மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என்றும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் சங்கங்கள் தமிழ் மன்றங்கள் தமிழ் அமைப்புகள் அழைக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் தமிழர் பாரம்பரிய உணவு, மருத்துவம், கலை, நெசவு போன்றவை காட்சிப்படுத்தப்படும் என்றும் தமிழ் வளர்ச்சிக்கான ஆய்வரங்குகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்