புதுவாழ்வு திட்டப் பணிகளை உலக வங்கித் தலைவர் நேரில் ஆய்வு

புதன், 23 ஜூலை 2014 (12:40 IST)
உலக வங்கித் தலைவர் டாக்டர் ஜிம் யங் கிம் (Jim Yung Kim) மற்றும் அவரது குழுவினர், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் செயல்பட்டு வரும் புதுவாழ்வு திட்டப் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 


 
 
காஞ்சிபுரம் படப்பை ஊராட்சியில் உள்ள மக்கள் அமைப்புகளான, கிராம வறுமை ஒழிப்புச் சங்க நிர்வாகிகள், சுய உதவிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புப் பிரதிநிதிகள், ஒத்த தொழில் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினர். புதுவாழ்வு திட்டம் மூலம் நிதி உதவி;, திறன் வளர்ப்பு ஆகிய பயன்கள் பெற்று மக்கள் தமது வாழ்வி;ல் முன்னேறி உள்ளதையும், தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சி இம்முன்னேற்றத்திற்கு அ;டிகோலியது என்பதையும் கேட்டறிந்தனர். புதுவாழ்வு திட்டத்தின் செயல்பாடுகள், அமைப்புகளின் இணையதள தகவல் மேலாண்மை ஆகியவை பெண்களின் முன்னேற்றத்தை எளிதாக்கியுள்ளது எனப் பாராட்டினர். ஆய்வில் டாக்டர் ஜிம் யங் கிம் மற்றும் உலக வங்கியின் இந்திய இயக்குநர் ஒனோ ரூல், பன்னாட்டு நிதிக் கழகத்தைச் சேர்ந்த செர்ஜ் டிவீயஸ், ஊரக மற்றும் வாழ்வாதாரம் (தெற்காசிய பகுதி) பிரிவு மேலாளர் திருமதி சோபா செட்டி, உலக வங்கியின் முதுநிலை ஊரக வளர்ச்சி வல்லுநர் சமிக் தாஸ் ஆகியோர் பங்கேற்றனர். 
 
இதன் தொடர்ச்சியாக இளைஞர் திறன் வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு செயல்பாடுகளைக் கண்டறிய இந்தியாவில் செயல்பட்டு வரும் டிரயம்ப் பன்னாட்டு (ஆயத்த உள்ளாடை தயாரிப்பு) நிறுவனத்திற்கு வருகை புரிந்தனர். டிரயம்ப் பன்னாட்டு (ஆயத்த உள்ளாடை தயாரிப்பு) நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த புதுவாழ்வு திட்ட இளைஞர்களிடம் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற பயன்கள் பற்றியும், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பற்றியும் கேட்டறிந்தனர். புதுவாழ்வு திட்டத்தின் சீரிய செயல்பாடுகளுக்குப் பாராட்டும் தெரிவித்தனர். இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 1,200 பணியாளர்களில் 674 இளைஞர்கள் திட்டத்தின் மூலம் பணி அமர்த்தப்பட்டுள்ளனா. புதுவாழ்வு திட்டம் இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவி;ல் வாழ்வாதார முயற்சிகளுக்கு ஓர் மு;ன்னுதாரணம் எனவும் பாராட்டினர்; இதில் 10 பணியாளர்கள் மாற்றுத் திறனாளிகள் என்பதைக் கண்டு வியந்து பாராட்டினர். தமிழக முதலமைச்சருக்குப் பாராட்டுதல்களையும், நன்றியும் தெரிவித்தனர். 
 
இந்த ஆய்வின்போது, உதயச்சந்திரன், இ.ஆ.ப., நிதி செயலாளர், புதுவாழ்வு திட்ட இயக்குநர் திருமதி. மைதிலி க. ராஜேந்திரன், இ.ஆ.ப., திரு. பிரிஜேஷ் பாண்டே, இ.ஆ.ப., துணைச் செயலாளர் பொருளாதார விவகாரங்கள் துறை, மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் இ.ஆ.ப., கூடுதல் திட்ட இயக்குநர் திருமதி.சஜீவனா, வாழ்வாதார சிறப்பு வல்லுநர் சக்கரபாணி மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட திட்ட மேலாளர் தனசேகர் ஆகியோர் உடனிருந்தனர். 
 
தமிழக அரசின் புது வாழ்வு திட்டம் உலக வங்கியின் நிதி உதவியோடு வறுமையை ஒழித்து மக்களை ஆற்றல்படுத்தும் திட்டமாகும். இத்திட்டமானது தமிழகத்தில் 26 மாவட்டங்களில் உள்ள 120 பிற்படுத்தப்பட்ட வட்டாரங்களில் 4174 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூபாய் 1667 கோடியில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் நலி;வுற்றோர் உள்ளிட்ட 9.6 இலட்ச ஏழைக் குடும்பங்களைப் பயனடையச் செய்து வருகிறது. 
 
இதனைத் தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்