பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: கனிமொழி

வியாழன், 4 பிப்ரவரி 2016 (23:39 IST)
தமிழகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
திமுக மகளிரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் ராணிப்பேட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திமுக மகளிர் அணியின் மாநிலச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி  கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் மது ஆறாக ஓடுகிறது. மதுவை அரசே விற்பனை செய்கிறது. மதுவை தடை செய்யவேண்டும் என்று தமிழகத்தில் உள்ள ஆண்களும், பெண்களும் ரோட்டுக்கு வந்து போராடி வருகின்றனர்.
 
டாஸ்மாக் மதுபானக்கடையால் இளம் விதவைகள் அதிகரித்துள்ளனர். ஆனால், இந்த அரசு இதை கண்டுகொள்ளவில்லை. அது மட்டும் இல்லை. தமிழகத்தில் பெண்கள் அதிக அளவில் பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்