சமீபகாலமாக டிக்டாக் மூலமாக பல காதல்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில் இப்போது கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தனது ஒரு தலைக் காதலனைத் தேடி ஒரு பெண், தஞ்சாவூரில் இருந்து மதுரைக்கு 200 கி மீ தூரத்தை நடந்தே கடந்துள்ளார்.
தஞ்சாவூரை சேர்ந்த பி.எஸ்சி பட்டதாரி பெண் டிக்-டாக் மூலம் மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் இருவரும் டிக்டாக் மூலமாக அறிமுகமாகியுள்ளனர். அந்த பெண் இளைஞர் மேல் காதல் கொள்ள அந்த இளைஞர் பெண்ணை நிராகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் தஞ்சாவூரில் இருந்து அந்த பெண் நடந்தே மதுரை செல்ல முடிவெடுத்துள்ளார்.
இந்த நடைபயணத்தின் போது சாலையில் நடந்து வரும் வீடியோ காட்சிகளையும், காதல் பாடல்களை பாடி, தற்போது எந்த இடத்தில் வருகிறேன் என்பதையும் வீடியோ பதிவாக செல்போனில் எடுத்து பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்த நேற்று மதியம் மதுரை மாவட்டம் மேலூர் அருகில் நடந்து வந்து விட்டதாகவும், அந்த இளைஞன் வந்து தன்னை அழைத்து செல்லவேண்டும் என்றும் கூறியுள்ளார். அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் எழுந்துள்ளன.