இதனையடுத்து முதல்வரை பார்க்க அப்பல்லோ மருத்துவமனை முன்பு தினமும் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் நேற்று இரவு கையில் சூலாயுதத்துடன், கழுதில் ருத்ராட்ச மாலையுடன் பெண் ஒருவர் அப்பல்லோ மருத்துவமனையில் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவமனை வாசலில் நேற்று வந்த அந்த பெண் திடீரென பக்தி பரவசத்துடன் ஆடி அருள்வாக்கு கூறியுள்ளார். பின்னர் ஆவேசமடைந்த அவர் மருத்துவமனையில் நுழைய முயற்சித்தார், இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.