தஞ்சையில் பழங்குடியின பெண்ணை காலணியால் சுவாமிநாதன் என்பவர் தாக்கிய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகியது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மூலம் காவல்துறையில் புகார் கொடுக்கப்படும் என்றும் புகாரின் அடிப்படையில் காலணியால் தாக்கிய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் சாலையில் கடந்த பழைய பாட்டில்கள் மற்றும் காகிதங்களை சேகரித்த பழங்குடியின பெண்ணை தரக்குறைவாக பேசிய சுவாமிநாதன் திடீரென தனது காலில் இருந்த காலணியை எடுத்து அந்த பெண்ணை அடித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வந்ததை எடுத்து தற்போது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது