இருதலை கொள்ளி எறுப்பாக தவிக்கும் ஜி.கே.வாசன்

வெள்ளி, 27 மே 2016 (17:47 IST)
சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, எந்த திசையில் செல்வது என தெரியாமல் ஜி.கே.வாசன் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
 

 
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில், தேமுதிக -மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணி அமைந்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டனர்.
 
ஆனால், தேர்தலில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் டெபாசிட் இழந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். 26 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா வேட்பாளர்களும் மண்ணைக் கவ்வினர்.
 
இந்த நிலையில், விரைவில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில், திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதா அல்லது மக்கள் நலக்கூட்டணியலேயே தொடர்வதா என குழப்பத்தில் உள்ளாராம் ஜி.கே.வாசன்.
 
மேலும், இதற்கு அடுத்து பாராளுமன்றத் தேர்தல் வருவதால், அதற்கும் ஏற்றால்போல் வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் இருதலை கொள்ளி எறுப்பாக தவித்து வருகின்றாராம். ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதில் உறுதியாக உள்ளாராம்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்