’மதுவிலக்கிற்கு மாணவர் புரட்சி மூலம்தான் தீர்வு காண முடியும்’ - வைகோ

புதன், 5 ஆகஸ்ட் 2015 (11:36 IST)
மதுவிலக்கிற்கு மாணவர் புரட்சி மூலம் தீர்வு காண முடியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
 
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழக அரசியல் வரலாற்றில் ஆகஸ்டு 4–ந்தேதி முக்கியமான நாள். பூரண மதுவிலக்கு போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. 75 சதவீத கடைகள் மூடப்பட்டு இருந்தன.
 
திமுக, அதிமுக கட்சிகள் தமிழக அரசை தீர்மானித்த காலம் தற்போது இல்லை. மதுவிலக்கு போராட்டத்துக்கு மாணவர்களை நான்தான் அழைத்தேன். இதை எங்கு வேண்டுமானாலும் கூறுவேன். மதுவுக்கு எதிராக போராட்டத்தில் மாணவர்கள், பெண்கள் பங்கேற்க வேண்டும்.
 
இதனால், மாணவர்களை அரசியலுக்கு வர சொல்லவில்லை. இது சமுதாய பிரச்சனை. மக்கள் பிரச்சனை. மாணவர்கள் புரட்சி மூலமாக தான் மதுவிலக்கு தீர்வு காண முடியும். மாணவர்கள் மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இதற்கு அதிமுக அரசுதான் காரணம்.
 
கலிங்கப்பட்டி கலவரத்துக்கு ஜெயலலிதாதான் காரணம். அதிமுக அரசு போலீசாரை ஏவி விட்டு வன்முறையில் ஈடுபட்டு உள்ளது" என்று கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்