மாணவர்களிடம் மருத்தவ சீட்டிற்காக, அவர்களிடம் பல கோடி வாங்கிவிட்டு, மோசடி செய்தவர் மதன். இவரை, 21 ஆம் தேதிக்குள் கைது செய்யுமாறு சென்னை பெருநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி, சென்னை காவல்துறையினருக்கு விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. அதனால் இன்று மதனை, காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்களா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.