இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா உயர் சிகிச்சை பெற சிங்கப்பூரில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூஸ் 18 தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் ஜெயலலிதா சுகர் மற்றும் கிட்னி சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக கூறியிருந்தது. ஆனால் சிறிது நேரத்திற்கு பின்னர் அந்த டுவிட்டை எடுத்துவிட்டனர்.
ஜிடிவி ஆங்கில இணையதளமும் ஜெயலலிதா சிங்கப்பூர் அழைத்து செல்லப்பட உள்ளார் என்றார் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஜெயலலிதா விமானத்தில் சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்ற எனது அறிவுரையை ஏற்க வேண்டும். நாம் எதிர்களாக இருக்கலாம் ஆனால் நீங்கள் நீண்ட காலம் உடல் நலத்துடன் வாழ வேண்டும் என கூறியுள்ளார்.