மற்ற மொழிகளை பின்னுக்கு தள்ளி தமிழ் முதலிடம்! – விக்கிப்பீடியா போட்டி!

வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (13:01 IST)
விக்கிப்பீடியா வலைதளம் நடத்திய கட்டுரை போட்டிகளில் மற்ற மொழிகளை விட அதிகமான பங்கேற்பாளர்களையும், கட்டுரைகளையும் கொண்டு தமிழ் முதலிடம் பிடித்துள்ளது.

உலகில் நடந்த, நடக்கும் பல்வேறு விஷயங்கள், நபர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் அளிக்கும் இணையதளம் விக்கிப்பீடியா. இந்த விக்கிப்பீடியா தளம் ஆண்டுதோறும் கட்டுரைப் போட்டி, புகைப்பட போட்டி போன்ற பலவற்றை நடத்தி வருகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வேங்கை திட்டம் என்ற கட்டுரை போட்டியை அறிவித்திருந்தது. இந்த கட்டுரை போட்டியில் வழங்கப்பட்ட பல்வேறு தலைப்புகளின் அடிப்படையில் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதில் மற்ற மொழிகளை விட தமிழ் மொழி கட்டுரைகளே அதிகமாக உள்ளதாகவும், தமிழ் பங்கேற்பாளர்களே மற்றவர்களை விட அதிகளவில் கலந்து கொண்டுள்ளதாகவும் விக்கிப்பீடியா தெரிவித்துள்ளது.

இந்த போட்டிக்காக தமிழ் மொழியில் சமர்ப்பிக்கப்பட்ட 2959 கட்டுரைகளில் பல வெளிநாடுகளில் வாழும் தமிழர்களாலும் எழுதப்பட்டுள்ளன. மொத்தமாக 62 தமிழ் பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த பட்டியலில் தமிழ் முதலிடத்தில் உள்ள நிலையில் பஞ்சாபி (குர்முகி எழுத்து வடிவம்) இரண்டாவது இடத்திலும், இந்தி 6வது இடத்திலும், சமஸ்கிருதம் 15வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்