ஜெ.வின் ஆர்.கே.நகர் தொகுதியில் சசிகலா போட்டியிடுவாரா?

சனி, 24 டிசம்பர் 2016 (11:11 IST)
ஜெயலலிதா மரணம் அடைந்ததை தொடர்ந்து ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இல்லாத தொகுதியாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


 

கடந்த டிசம்பர் 6ஆம் தேதி தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மாரடைப்பு காரணமாக இறந்தார். முன்னதாக நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருந்தார்.

இந்நிலையில், ’ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதி [சட்டமன்ற உறுப்பினர் இல்லாத] காலியான தொகுதி என்று அறிவிக்கப்படுவதாக சட்டப்பேரவை செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பாணையை தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு தமிழக சட்டப்பேரவை செயலாளர் அனுப்பி வைக்கப்படும். பின்னர், அந்த கடிதம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டு 6 மாதங்களுக்குள் ஏதாவது ஒரு தேதியில் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே சசிகலா முதலமைச்சராக பதவி ஏற்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்