குறிப்பாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தென்மண்டலத்தில் தூத்துகுடி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டுமே திமுக போட்டியிடுகிறது.
தென்மண்டலத்தில் உள்ள தூத்துகுடி தொகுதியில் கனிமொழி போட்டியிட போவதால் வெற்றி நிச்சயம் என்பதாலும், தென்காசி, திருநெல்வேலி ஆகிய இரண்டு தொகுதிகளை வாங்க எந்த கூட்டணி கட்சியும் முன்வரவில்லை என்பதாலும் திமுகவே அந்த தொகுதிகளில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.
இதற்கு முக்கிய காரணம் அழகிரியின் மேல் உள்ள பயமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் இன்னும் மு.க.அழகிரிக்கு செல்வாக்கு உள்ளது. தேர்தல் நேரத்தில் திடீரென அழகிரி திமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முற்பட்டால் திமுகவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் திமுக, மதுரை மண்டலத்தை தவிர்த்ததாக கூறப்படுகிறது.