அந்த உண்மையான ஆர்.நட்ராஜ் யார்?

ஞாயிறு, 13 டிசம்பர் 2015 (23:24 IST)
தந்தி டிவியில் பேட்டி கொடுத்து ஐ.பி.எஸ். அதிகாரி நட்ராஜ் அல்ல அவர் ஒரு பத்திரிக்கையாளர் என தகவல் வெளியாகியுள்ளது.
 

 
சென்னை மாநகர காவல்துறை ஆணையர், சிறைத்துறை, தீயணைப்புத் துறை டிஜிபி, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆகிய பதிவிகள் வகித்தவர் ஆர்.நடராஜ். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.
 
இதற்கிடையில், தமிழகத்தில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த ஆர்.நடராஜ், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறந்தது தொடர்பாகவும், நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மீதும் குற்றம்சாட்டி இருந்தார்.
 
இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.நடராஜ் முன்னாள் காவல்துறை இயக்குனர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார் என அறிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், தந்தி டிவியில் பேட்டி கொடுத்து ஐ.பி.எஸ். அதிகாரி நட்ராஜ் அல்ல அவர் ஒரு பத்திரிக்கையாளர் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதிமுகவினர் மட்டும் இன்றி பலரும் குழப்பத்தில் தவித்து வருகின்றனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்