முதல்வர் ஜெயலலிதா குறித்து, நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு ஆவேச கருத்து தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு செய்தியாளர்களின் ஒரு கேள்விக்கு காட்டமாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், நான் ஒரு நடிகை தான். ஒத்துக் கொள்கிறேன். காங்கிரஸ் கட்சியை நம்பி நான் உள்ளேன். என்னை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை. காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரும் என்னை நடிகையாக பார்க்கவில்லை. காங்கிரஸ் தொண்டராகவே பார்க்கிறார்கள்.