ஐந்து நாள் விசாரணையில் பச்சமுத்துவிடம் காவல்துறை எதிர்பார்ப்பது என்ன?

செவ்வாய், 30 ஆகஸ்ட் 2016 (18:38 IST)
ரூ. 75 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர் எஸ்.ஆர்.எம்.கல்லூரி நிறுவனர் பச்சமுத்து.


 
இவரின் ஜாமின் மனு இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அவரது மகன் ரவி, ”தந்தையை விடுதலை செய்யுங்கள், அவர் மோசடி செய்ததாக கூறும் பணத்தையும் திருப்பி அளிக்க தயாராக இருக்கிறேன்” என்று கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில், பச்சமுத்துவை ஐந்து நாள் காவலில் விசாரிக்க காவல்துறை தரபில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு நீதிபதி, ”ஐந்து நாள் கொடுக்க முடியாது ஒரு நாள் மட்டுமே விசாரிக்க அனுமதி” என்று உத்தரவிட்டுள்ளார்.

கைதிற்கு முன்பு 14 மணி நேரம் அவரை விசாரித்த காவல்துறையினர், மேலும் அவரை விசாரிக்க ஐந்து நாள் கேட்பதற்கான காரணம் என்ன?. ஊழலை நோக்கி விசாரணை இருக்கிறதா? அல்லது மதன் மாயமானதை பற்றி விசாரணை இருக்கிறதா? என்பதை காவல்துறையினர் தான் கூற வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்