திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரியால் திமுக இரண்டாக உடையும் என்று கனவு கண்ட பலருக்கு தற்போது ஏமாற்றமாக இருந்திருக்கும். எந்தவித எதிர்ப்பும் இன்றி போட்டியின்றி திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று கொண்டார். அப்படியென்றால் அழகிரி ஆதரவாளர்கள் தற்போதைய திமுகவில் இல்லை என்றே கூறப்படுகிறது
எனவே இப்போதைக்கு அழகிரிக்கு இருப்பது இரண்டே சான்ஸ்தான். மு.க.ஸ்டாலினின் தலைமையை ஏற்று திமுகவில் இணைந்து தலைமைக்கு விசுவாசமாக இருப்பது. இரண்டாவது பாஜகவில் சேர்வது. பாஜகவில் சேர்ந்தால் திமுகவை உடைக்க அவர் கட்டாயப்படுத்தப்படுவார். ஆனால் அவரது இன்றைய சூழலில் அவரால் திமுகவை உடைப்பது கடினம்தான். எனவே அஞ்சா நெஞ்சர் அடுத்தகட்டமாக திமுகவுடன் சுமூக உறவை ஏற்படுத்த முயற்சிப்பதே அவருடைய அரசியல் எதிர்காலத்திற்கு நல்லது என்பதே அவருக்கு நெருக்கமானவர்களின் கருத்தாக உள்ளது.