ஆனால் ஆரம்பத்தில் அரசியலில் நுழைய யோசித்த தீபா, ஓபிஎஸ் அவர்களின் தியானத்திற்கு பின்னர் அவருடன் இணைய முயற்சித்தார். ஆனால் தவறான வழிகாட்டுதலால் தனி அமைப்பை தொடங்கி, அந்த அமைப்பிலும் ஆரம்ப நிலையிலேயே கோஷ்டி பூசலை ஏற்படும்படி செய்தார். குறிப்பாக அவரது கணவரே அவரை எதிர்க்கும் நிலை உண்டாகியது.
தற்போது கணவரை வீட்டைவிட்டு விரட்டிவிட்டு தனி ஆளாக கட்சி நடத்தி வருகிறார். தீபாவின் முரணான அரசியலால் தொண்டர்கள் தீபாவை மறக்க தொடங்கிவிட்டனர். தற்போது தீபாவின் வீட்டின் முன்னும், அலுவலகத்திலும் ஒரு பத்து பேரை கூட பார்க்க முடியவில்லை. தீபாவின் அரசியல் மற்றும் முதல்வர் கனவு அஸ்தனமனத்தை நோக்கி போய்க்கொண்டிருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.