ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த சசிகலா புஷ்பாவுக்கு நேர்ந்தது என்ன?

வியாழன், 8 டிசம்பர் 2016 (13:16 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற தன்னை போலீசார் நடத்திய விதம் சரியில்லை என அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா குற்றம் சாட்டியுள்ளார்.


 
 
கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் கூடவே இருந்து பார்த்துக்கொண்டார் அவரது தோழி சசிகலா. 75 நாட்கள் மருத்து சிகிச்சைக்கு பின்னர் கடந்த 5-ஆம் தேதி ஜெயலலிதா மரணமடைந்தார்.
 
இந்த இடைப்பட்ட காலத்தில் ஜெயலலிதாவின் கூடவே இருந்த சசிகலா குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார் சசிகலா புஷ்பா. இந்நிலையில் ஜெயலலிதா இறந்துவிட்டதை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.
 
அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவின் மறைவு எனக்கு அரசியல்ரீதியாக பேரிழப்பாகும். என்னை அரசியலில் உருவாக்கிவிட்ட ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக சென்றபோது போலீஸ் நடத்திய விதம் வேதனையளித்தது. ஒரு எம்பி என்றும் பாராமல் என்னை போலீஸார் கீழே பிடித்து தள்ளினர். அத்தனை தடைகளையும் மீறி என் தாயை தரிசித்துவிட்டு வந்தேன் என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்