தமிழகத்தில் மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

வியாழன், 8 செப்டம்பர் 2016 (17:22 IST)
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் தெரிவித்த தகவலில் “வெப்பச்சலனம் காரணமாக தமிழகம்  மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

அதேபோல், சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலையில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்