மிஸ்டர் ரமணா இது உங்களுக்கே நியாயமா? வெளுத்து வாங்கிய அன்புமணி

செவ்வாய், 24 நவம்பர் 2015 (00:42 IST)
தினமும் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்துவிட்டு, இன்று மழை வரும், நாளை வெயில் அடிக்கும் என்று கணிக்கின்றார் சென்னை வானிலைமைய இயக்குநர் ரமணன் என்று, பாமக முன்னாள் அமைச்சர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.


 

இது குறித்து, பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
அமெரிக்காவில் வானிலை அறிவிப்புகள் மிகவும் துள்ளியமாக கணித்து மக்களுக்கு அறிவிக்கின்றனர். அதே போல் மழை பெய்யும். இது குறித்த எச்சரிக்கை அறிவிப்புகள் தொலைக்காட்சிகள் மூலம்  வெளியிடுகின்றனர்.
 
ஆனால், தமிழ்நாட்டில் நடப்பது என்ன, நமது  சென்னை வானிலை மைய இயக்குநர் ரமணன், மழை வரும் முன்பே சொல்வதில்லை. மாறாக மழை முடித்த பிறகுதான் மழை வரும் என்பார்.

அதைவிட, சென்னையிலே பரவலாக மழை பெய்யும். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். ஒரு சில இடங்களில் பலமான மழை என்பார். இதில் என்ன பெரிய விஞ்ஞானம் உள்ளது எனக்கு புரியவில்லை. தெரியவும் இல்லை.
 
நான் நினைக்கிறேன், ஒரு வேளை, தினமும் தனது வீட்டுக்கு வெளியே வந்து வானத்தை பார்த்து விட்டு, இன்று மழை வரும். நாளை வெயில் அடிக்கும் என ரமணன் கணிப்பார் போல் தெரிகிறது. இப்படி சொன்னால் மக்கள் எப்படி முன்னெச்சரிக்கையாக செயல்படமுடியும்.
 
எனவே, வெளிநாட்டு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மக்களுக்கு தேவையான வானிலை தகவல்களை அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த அரசு உள்ளவரை அது நடக்கவே நடக்காது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்