இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறுகையில், எங்கள் மேடைகளில் நான் திமுகவையும், அக்கட்சி பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் அதிகம் விமர்சிப்பதாகவும், அதிமுகவை விமர்சிக்கவில்லை என்றும் கூறுவது தவறு.
எங்களது அனைத்து கூட்டங்களிலும் அதிமுக அரசின் குறைகளை சுட்டிக் காட்டி 30 நிமிடம் பேசுகிறேன். ஆனால் மு.க.ஸ்டாலினைப் பற்றி மட்டுமே 3 நிமிடம் மட்டுமே பேசுகிறேன். எனவே, மு.க.ஸ்டாலின் வார்த்தைகளை அளந்து பேசவேண்டும் என்றார்.