தேனி மருத்துவமனையில் தண்ணீர் இன்றி தவிக்கும் நோயாளிகள்.

புதன், 11 மே 2016 (14:48 IST)
போதிய மழையின்றி வைகை அணையில் நீர்மட்டம் குறைந்து உள்ளதால், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தண்ணீர் இன்றி நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.


 


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கானாவிலக்கில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வந்து செல்வார்கள். மருத்துவமனையில் உள்ள ஆழ்துளை கிணற்றில் தண்ணீர் வறண்டு விட்டதால் தற்போது மருத்துவமனை வைகை அணையில் உள்ள தண்ணீரையே நம்பியுள்ளது.
 
இதுகுறித்து நோயாளி ஒருவர் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கடந்த 4 நாட்களாக தண்ணீர் இல்லாததால் இங்குள்ள கழிப்பறைகளை மூடப்பட்டு விட்டது,

தினந்தோறும் குறைந்தது 20 லிட்டர் மினரல் தண்ணீர் கேன் வாங்கி பயன்படுத்துகிறோம்
ஏழை எளியோருக்கான அரசு மருத்துவமனையில் சிரமப்பட்டு வருகிறோம், என்றார்.

இதையடுத்து மருத்துவமனையில் டேங்கர் லாரியில் மூலம் தண்ணீர் வரவலைக்கப்பட்டு தற்போது பயன்படுத்தி வருவதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் திருநாவகரசு தெரிவித்துள்ளார். 
 
தமிழகமெங்கும் தண்ணீர் தட்டுப்பாடு பரவி வருகிறது. அனைவரும் பருவ மழையையே நம்பியுள்ளனர், இம்முறையும் பருவ மழை பெய்யாவிட்டால் கட்டாயம் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்