12 அடி ஆழ பள்ளத்தில் விழுந்த கூலி தொழிலாளி உயிருடன் மீட்பு

வியாழன், 26 நவம்பர் 2015 (19:00 IST)
சென்னை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் 39 வார்டு மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் வேலை இன்று காலை முதல் நடைபெற்று வந்தது.


 
 
இந்த வேலையை ஒப்பந்த தொழிளர்கள் செய்து வந்தனர். இதில் திருத்தணியைச் சேர்ந்த ராஜேந்ததிரன் என்பவர் வேலை செய்து கொண்டு இருக்கும் போது, அவர் தோண்டிய 12 அடி ஆழ பள்ளத்தில் திடீரென விழுந்துவிட்டார். அவருடன் வேலை செய்த தொழிலாளி உடனடியாக காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையெடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் அவரை மீட்க போராடினார். அவரை மீட்ட தீயணைப்புத்துறையினர் முதலில் இறந்துவிட்டதாக கூறி மேலே அவரது உடலை கொண்டு வந்தனர். அப்பொழுது அவரது உடலை சோதித்த பார்த்த மருத்துவர்கள் உயிர் இருப்பதாக தெரிவித்தனர். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 


 
 
எவ்விதமான பாதுகாப்புமின்றி பணியில் ஈடுபட்டதால் தான் இந்த விபத்து ஏற்பட்டதாக அருகில் இருந்தவர்கள் குறிப்பிட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்