இந்நிலையில், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. கலைச்செல்வன், தற்போது எடப்பாடி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் தனது ஆதரவாளர்களுடன் நேற்று மாவட்ட கலெக்டரை சந்தித்து, தனது தகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப்பணிகள் குறித்த மனுவைக் கொடுத்தார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பல ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. இந்த அரசு மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அவர்கள் தங்கள் பதவிகளை தக்க வைப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். நீட் தேர்வு விவகாரத்திலும் மாணவர்களை ஏமாற்றி விட்டனர்.
ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் தினகரன் பக்கம் உள்ள நிலையில், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ கலைச்செல்வன் எடப்பாடிக்கு எதிராகவும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்திருப்பது எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.