ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கிராமம் : தீக்குளிக்க முயன்ற குடும்பம் ! பகீர் சம்பவம்

Webdunia
திங்கள், 24 ஜூன் 2019 (19:24 IST)
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆக்கியடிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரை,அந்த கிராமத்தினர் ஒதுக்கி வைத்துள்ளனர்.இதனால் பாதிக்கப்பட்ட குடும்பம், கிராமத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆக்கியடிப்பட்டி கிராமத்து பஞ்சாயத்து தலைவர்கள் ஒன்று கூடி அக்கிராமத்தில் வசிக்கும் பாரதி என்பவரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்தனர்.இதனால் பாதிக்கப்பட்ட பாரதி உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
மேலும் தன்னையும், தன் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அம்மனுவில் தெரிவித்திருந்தார்.இதையடுத்து பஞ்சாயத்து தலைவர்களை விசாரித்து அவர்கல் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியிருந்தது.ஆனால் அம்மாவட்ட டிஎஸ்பி  இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
 
அதனால் விரக்தி அடைந்த பாரதி மற்றும் அவரது குடும்பத்தினர் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். ஆனால் அங்கிருந்த போலீஸார் மற்றும் மக்கள் அவர்களை காப்பாற்றினர். 
 
இதுகுறித்து பாரதி கூறியதாவது :  எங்கள் கிராமத்தில் அன்புராஜ் என்பவர் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். அவர் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார். அவர் தலைமையில் பஞ்சாயத்து கூடி எங்கள் குடும்பத்தை  ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். கடைகளில் எங்களுக்கு பொருட்கள் தரக்கூடாது என்றும், கூறி தடுக்கின்றனர். மிரட்டலும் விடுக்கின்றனர். இதுகுறித்து போலீஸாரிடம் மனுகொடுத்தும் நடவடிக்கை இல்லை. அதனால் உயிரை விட முடிவு செய்து இங்கே தீக்குளிக்க வந்தோம் என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்