என் வங்கிக் கணக்கில் ரூ 50 ஆயிரம் போட்டிருந்தார்கள்: விஜயலட்சுமி தகவல்..!

திங்கள், 18 செப்டம்பர் 2023 (15:16 IST)
நான் சீமான் மீதான புகாரை வாபஸ் பெற்றவுடன் அக்காவுடன் ஊருக்கு செல்லுமாறு எனது வங்கி கணக்கில் ஐம்பதாயிரம் போட்டது சாட்டை துரைமுருகன்.
 
 என்னையும் அக்காவையும் பெங்களூருக்கு அனுப்பி வைத்ததே சாட்டை துரைமுருகன் தான் என்று நடிகை விஜயலட்சுமி கூறினார். 
 
மேலும் சாட்டை துரைமுருகனின் செல்போனை ஆராய்ந்தால் சீமான் என்னுடன் பேசியது தெரியும் என்றும் நான் சாட்டையுடன் நடத்திய உரையாடல்களையும் வைத்திருக்கிறேன் என்றும் தேவைப்பட்டால் அவரை போலீஸிடம் காட்டுவேன் என்றும் தெரிவித்தார். 
 
என் மீது சீமான் மானநஷ்ட  வழக்கு போடுவதாக கூறியிருக்கிறார். அப்படி போட்டால் என்னிடம் உள்ள ஆதாரத்தை காட்டுவேன். என்னை பொய் சொல்லும் பெண்ணாக சித்தரித்தால் இந்த மோதல் முடிவுக்கு வராது என்றும் அவர் தெரிவித்தார் 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்