ஜெயலலிதாவை வீட்டில் சென்று சந்திப்பேன்: பல்டி அடித்த விஜயகாந்த்!

செவ்வாய், 15 நவம்பர் 2016 (09:04 IST)
மருத்துவமனையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவை அரசியல் கட்சி தலைவர்கள் கட்சி பாகுபாடின்றி மருத்துவமனை சென்று விசாரித்து வருகின்றனர். ஆனால் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரும் தேதிமுக தலைவருமான விஜயகாந்த் இன்னமும் சென்று நலம் விசாரிக்கவில்லை.


 
 
இந்நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து மதுரை பொதுக்கூட்டதில் பேசிய விஜயகாந்த் தான் ஜெயலலிதாவை போய் பார்க்காதது குறித்து விளக்கம் அளித்தார்.
 
நான் ஜெயலலிதாவை மருத்துவமனைக்கு சென்று பார்க்கலன்னு கேக்கறாங்க?. நான் ஏன் போகணும்? அவர் குணமாகி வரணும்னு தான் நினைக்கிறேன். அங்க போறவங்களோட நோக்கம் வேற, என் கட்சிக்காரன் மருத்துவமனையில் இருந்தா போய் பார்ப்பேன். அவங்கள நான் ஏன் போய் பார்க்கனும், அதனால தான் போகவில்லை என்றார்.
 
அவர் தன்னுடைய கட்சி காரர் இல்லை எனவே அவரை போய் பார்க்கமாட்டேன் என கூறிய விஜயகாந்த் தற்போது தனது முடிவை மாற்றியுள்ளார். ஜெயலலிதாவை நேரில் சென்று பார்க்க அனுமதி தரட்டும் நான் சென்று பார்க்க தயார் என கூறியுள்ளார்.
 
அரவக்குறிச்சி தொகுதியில் பிரச்சாரம் செய்த விஜயகாந்த், எல்லோரையும் போல் முதல்வரை மருத்துவமனைக்குச் சென்று சந்திக்க மாட்டேன். என்னை நேரில் சந்திக்க அனுமதிக்கட்டும், நான் சென்று பார்க்க தயார். மற்றவர்கள் போல் நடிக்க மாட்டேன்.
 
என்னைப் பொருத்தவரை இறைவன் அருளால் ஜெயலலிதா பூரண குணமடைந்து மீண்டும் நல்லாட்சி புரிய வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். ஆகவே அவர் குணமடைந்து வீடு திரும்பியதும் அவரை வீட்டுக்கே சென்று சந்திப்பேன் என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்