காவிரி விகவாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விஜயகாந்த் வரவேற்பு

வெள்ளி, 16 பிப்ரவரி 2018 (19:44 IST)
காவிரி எந்த மாநிலத்துக்கும் சொந்தமில்லை என்று நீதிபதிகள் கூறியது வரவேற்கத்தக்கது என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த கூறியுள்ளார்.

 
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று, தமிழகத்திற்கு தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் தமிழக விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர். 264 டிஎம்சி நீர் கேட்டு தமிழக அரசு கோரிகை வைத்தது குறிப்பிடத்தக்கது. 
 
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த கூறியதாவது:-
 
காவிரி எந்த மாநிலத்துக்கும் சொந்தமில்லை என்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது. மத்திய அரசு மாநிலங்களுக்கிடையே வஞ்சனையை பார்க்க கூடாது. மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்