கருணாநிதியை சந்தித்தார் விஜயகாந்த்

ஞாயிறு, 26 ஏப்ரல் 2015 (13:07 IST)
திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரத்திலுள்ள அவரது வீட்டில், தேமுதிக தலைவர் விஜயாந்த் சந்தித்துப் பேசினார்.
 
மேகதாது அணை பிரச்னை, செம்மரக்கட்டை கடத்தல், தமிழக மீனவர்கள் பிரச்னை, நிலம் கையகப்படுத்தும் திட்டம், முல்லை பெரியாறு பிரச்னை உள்ளிட்ட 5 விவகாரங்கள் குறித்து அதிமுக தவிர அனைத்துக் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேச தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடட்டமிட்டிருந்தார்.

அதன்படி, காலை 10.57 மணியளவில் கோபாலபுரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை அவரது வீட்டில் விஜயகாந்த் சந்தித்து பேசினார். அப்போது மு.க.ஸ்டாலின், ஆ.ராசா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆகியோரும் உடன் இருந்தனர். 
 
விஜயகாந்துடன் தேமுதிக இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், மாவட்ட செயலாளர்கள் வி.என்.ராஜன், ஏ.எம்.காமராஜ் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். கருணாநிதியுடன் விஜயகாந்த் சுமார் அரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
 
இந்நிலையில், நாளை பகல் 12.30 மணிக்கு டெல்லியில் அவர் பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்ககவுள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்