விஜயகாந்துக்கு சைனஸ், டான்சில்ஸ் பிரச்சனை: பிரேமலதா விளக்கம்

வெள்ளி, 11 மார்ச் 2016 (10:54 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுவது புரியவில்லை என்றும், முன்னுக்கு பின் தொடர்பில்லாமல் பேசுகிறார் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. இது குறித்து விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விளக்கமளித்துள்ளார்.


 
 
நேற்று நடைபெற்ற தேமுதிக மகளிர் அணி மாநாட்டில் பேசிய பிரேமலதா, விஜயகாந்தின் இந்த புரியா பேச்சின் காரணத்தை கூறினார். மேலும் அதனை சமூக வலைதளங்களில் விமர்சிப்பதையும் குற்றம் சாட்டினார்.
 
விஜயகாந்திற்கு சைனஸ் பிரச்சனை இருப்பதால் தான் மேடைப் பேச்சில் அவருக்கும் தடுமாற்றம் இருப்பதாக பிரேமலதா கூறினார். மேலும் அவருக்கு தொண்டையில் டான்சிலஸ் பிரச்சனை உள்ளது, வயதாகிவிட்டதாலும் அவருடைய பேச்சு புரியாமல் இருக்கலாம் என்றார்.
 
குண்டடி பட்ட பின்னர் எம்.ஜி.ஆர் பேசுவதையும் புரியவில்லை என்றார்கள், அதேபோல் காமராஜர் பேசுவதையும் புரியவில்லை என்றார்கள். இன்று அவர்கள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறார்கள், விஜயகாந்த் எப்பொழுதும் உண்மையை பேசுபவர் என்றார் பிரேமலதா.

வெப்துனியாவைப் படிக்கவும்