செய்தியாளர்களை ‘தூ’ என்று துப்பிய விவகாரம் : விஜயகாந்த் தரப்பில் விளக்கம்

செவ்வாய், 6 செப்டம்பர் 2016 (15:40 IST)
செய்தியாளர்களை சந்திப்பில்  ‘தூ’ என்று துப்பிய விவாகரம் தொடர்பாக  இந்திய பிரஸ் கவுன்சிலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


 

 
விஜயகாந்த் பொதுஇடங்களில் தன்னுடையை கோபத்தை வெளிப்படுத்துபவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு முறை ‘ தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்கோ...’ என்று பத்திரிக்கையாளர்களிடம் சீறினார். ஒருமுறை ‘நீ என்ன எனக்கு சம்பளம் தருகிறாயா?.. நாயி..” என்று ஒரு பத்திரிக்கையாளரிடம் சீறினார்.
 
எல்லாவற்றுக்கும் உச்சமாக, ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் “நீங்கள் எல்லாம் பத்திரிக்கைகாரங்களா?.. தூ..” என காறித் துப்பி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார்.
 
அவர் அப்படி நடந்து கொண்டதற்கு நான்கு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய பிரஸ் கவுன்சில் தரப்பில், கடந்த ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் விஜகாந்த் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.
 
இந்நிலையில், இன்று டெல்லியில் உள்ள இந்திய  பிரஸ் கவுன்சிலில், விஜயகாந்த் சார்பில், டெல்லி மாநில தேமுதிக செயலர் மணி ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.  அப்போது விஜயகாந்த் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்று மணி விளக்கியதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்