தமிழிசை செளந்தரராஜன், எச்.ராஜாவுக்கு விஜயகாந்த் வாழ்த்து

ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2014 (15:01 IST)
தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள முதல் பெண் தலைவரான தமிழிசை சௌந்தரராஜனின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறுகையில்,
 
இவர் மகப்பேறு மருத்துவர், தமிழ் இலக்கியவாதி, சமூக ஆர்வலர், அரசியல்வாதி என்று பல்வேறு தளங்களில் தனக்கென முத்திரை பதித்தவர் என்பதோடு அரசியலில் மூத்த தலைவர் குமரி அனந்தன் அவர்களின் புதல்வியுமான இவர் தமிழக பாஜகவின் தலைவராக திறம்பட செயலாற்றுவார் என்று உறுதியாக நம்புகிறேன். அதோடு பாஜகவின் தேசிய செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள அரசியலில் நீண்ட அனுபவமும் பழகுவதற்கு எளிமையானவருமான திரு.எச்.ராஜா அவர்களுக்கும் தேமுதிக சார்பில் என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்