கட்சியை ஏலம் விட்டு பேரம் பேசும் விஜயகாந்த்: மேயர் ராஜன் செல்லப்பா

புதன், 30 டிசம்பர் 2015 (13:30 IST)
மதுரை மாநகராட்சி, 99 வது வட்ட அதிமுக  நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கூட்டத்துக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மதுரை புறநகர் மாவட்ட செயலாளரும், மேயருமான ராஜன் செல்லப்பா தேமுதிக தலைவர் விஜயகாந்தை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.


 
 
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வுடன் சேர்ந்து தனது கட்சிக்கு அங்கீகாரம் பெற்ற விஜயகாந்த், தற்போது கட்சிக்கென கொள்கை இல்லாமல் பணம், பதவி, சீட்டுக்காக கட்சியை ஏலம் விட்டு, ஒவ்வொரு கட்சியாக அழைத்து கூட்டணி என்ற பெயரில் பேரம் பேசுகிறார். விஜயகாந்த் மக்களுக்காக கட்சி நடத்தவில்லை என கடுமையாக தாக்கி பேசினார் மேயர் ராஜன் செல்லப்பா.
 
வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஒரு வாக்கு சாவடிக்கு 25 பேர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என கட்சியினரிடம் அறிவுறுத்துவார்கள். மேலும் பேசிய அவர் 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி எழுதப்பட்ட ஒன்றாகும். இதே வேளையில் நாம் ஓட்டு சேகரிப்பதற்கு எதற்காக என்றால் எதிர் அணியினர் டெபாசிட் இழக்க வேண்டும் என கூறினார்.

2015 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகளுக்கு கீழே கிளிக் செய்யவும்.....
 
2015 ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள் ஓர் கண்ணோட்டம்

வெப்துனியாவைப் படிக்கவும்