உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்தது ஏன்?: ரகசியத்தை உடைத்த விஜயகாந்த்

செவ்வாய், 3 மே 2016 (11:11 IST)
உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்தது ஏன் என்ற கேள்விக்கு விஜயகாந்த் விடையளித்தார்.


 

வருகிற சட்டபேரவை தேர்தலில் தேமுதிக தலைவரும், மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான விஜயகாந்த் உளுந்தூர் பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து உளுந்தூர்பேட்டை தொகுதியில் தற்போது அவர் பிரச்சாரம் செய்துவருகிறார். நேற்று அத்தொகுதிக்குட்பட்ட எலவனாசூர்கோட்டையில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவ்ர் பேசியபோது,

ஏற்கெனவே போட்டியிட்ட விருதாச்சலமோ அல்லது ரிஷிவந்தியத்திலோ நான் போட்டியிடுவேன் என அனைவரும் எதிர்ப்பாத்திருக்கலாம். எப்போதுமே எனக்கு அதிக குக்கிராமங்கள் கொண்ட தொகுதிதான் பிடிக்கும். அதனால்தான் உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்தேன். முதலில் இங்கு அரசு கலைக்கல்லூரி, நவீன அரசு மருத்துவமனை கட்டுவதே எனது லட்சியம். மேலும் உளுந்தூர்பேட்டை தொகுதியில் வெற்றிபெற செய்தால் பள்ளிக்கூடங்களை தரம் உயர்த்துவேன் என்று பேசினார்.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்