கர்நாடகாவில் தமிழர்கள் தாக்குதல்: வெகுண்டெழுந்த விஜயகாந்த்!

செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (12:10 IST)
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழர்கள் மீது தாக்குதல், தமிழக உடமைகள் மீது தாக்குதல் என வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளன.


 
 
144 தடை உத்தரவு பிறப்பித்தும் நேற்று வன்முறையை கட்டுக்குள் கொண்டவர முடியவில்லை. துணை ராணுவப்படை வரவழைக்கப்பட்டும் கன்னடர்கள் அடங்கியபாடில்லாமல் நிலமை மோசமாகியது.
 
இதனையடுத்து பல்வேறு தரப்பும் கர்நாடக அரசுக்கும் நிலமை மோசமாகியும் மவுனமாக இருக்கும் மத்திய அரசுக்கும் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில் கர்நாடகாவில் தமிழர்கள் மீதும், தமிழக உடமைகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து தேமுதிக சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த், வரும் 16-ஆம் தேதி, சென்னை கோயம்பேட்டிலுள்ள அவரது கட்சி அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருக்கபோவதாக அறிவித்துள்ளார்.
 
எந்த அரசியல் கட்சியும் போராட்டம் நடத்த முன்வராத நிலையில் விஜயகாந்த் அறிவித்துள்ள இந்த உண்ணாவிரத போராட்டம் அரசியல் கட்சி தலைவர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்