விஜயகாந்த்தை எதிர்த்து சிங்கமுத்து போட்டி?

திங்கள், 21 மார்ச் 2016 (05:27 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை எதிர்த்து, அதிமுக சார்பில் சிரிப்பு நடிகர் சிங்கமுத்துவை நிறுத்தி கடும் போட்டி கொடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 
கடந்த சட்டசபைத் தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது கடும் தாக்குதல் நடத்தி பேசினார். தற்போது வடிவேலு இடத்திற்கு காமெடி நடிகர் சிங்கமுத்து வந்து சேர்ந்துள்ளார்.
 
சமீபத்தில் விஜயகாந்த் போலவே காமெடியாகப் பேசி கிண்டலடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டார் சிங்கமுத்து. இது எம்.எல்.ஏ சீட்டை மனதில் வைத்தே அவர் வெளியிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இதே சிங்கமுத்து கடந்த லோக்சபா தேர்தலின்போது விஜயகாந்த்துக்கு எதிராக பிரசாரம் செய்தார். தற்போது, விஜயகாந்த்துக்கு எதிராகப் போட்டியிட சீட் கேட்டுள்ளார் சிங்கமுத்து.
 
விஜயகாந்த் போட்டியிட உள்ள விருகம்பாக்கம் அல்லது  மதுரவாயல் அல்லது திருப்பத்தூர் அல்லது விஜயகாந்த் போட்டியிடும் தொகுதி என இடங்கள் காத்துள்ளாராம் சிரிப்பு நடிகர் சிங்கமுத்து. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்