இந்தியாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து 6ஆவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது தமிழகம். இதற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விருது வழங்கப்பட இருந்தது. விருதை பெறுவதற்காக, திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் செல்ல, அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை திருச்சி விமான நிலையம் வந்தார். 8.45 மணிக்கு விமானத்தில் அவர் செல்ல இருந்த நிலையில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.