நீங்க வெக்கப்படனும்; அசிங்கமான கம்மெண்டுகள் வரும்: பாஜக வானதியை எச்சரித்த விஜய் ரசிகர்! (வீடியோ)

வியாழன், 17 நவம்பர் 2016 (08:46 IST)
பிரதமர் மோடி அறிவித்த 500, 1000 ரூபாய்கள் செல்லாது என்ற அறிவிப்பால் பொதுமக்கள் அனைவரும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சரியான திட்டமிடலுடன், பொதுமக்களுக்கு சிரமமில்லாமல் இதனை செய்திருக்கலாம் என பலரும் கூறுகின்றனர்.


 
 
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரபல நடிகர் விஜய், இந்த திட்டத்தை வரவேற்றார் ஆனால் அதே நேரத்தில் ஏழைகள் கஷ்டப்படுகிறார்கள் என அவர்களின் சிரமங்களை கூறினார். மேலும் 20 சதவீதம் பேரில் ஒரு சிறிய குரூப் மக்கள் செய்யும் தவறுக்கு 80 சதவீத மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
 
இதனையடுத்து இதற்கு பதலளிக்கும் விதமாக பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் கூறுகையில், நடிகர் விஜய் தன்னுடைய தேவைக்கு போக மீதியை ஏழைகளுக்கு கொடுத்து உதவலாமே என அவரது பெயரை குறிப்பிடாமல் பேசினார்.
 
இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பலரும் வானதி சீனிவாசனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் தன்னுடைய எதிர்ப்பை வீடியோ மூலமாக வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
 
அந்த வீடியோவில், ராகுல் என்னும் விஜய் ரசிகர் கூறுகையில், விஜயை பத்தி ரோட்ல வந்து உதவி செய்யனும்னு சொல்றதுக்கு நீங்க வெக்கப்படனும். நீங்க ஒரு கவர்மெண்டா இருந்துட்டு இப்படியெல்லாம் சொல்லக்கூடாது. நாங்க ஒரு குடிமகன் நாங்க என்ன வேணும்னாலும் பேசலாம் என்றார்.
 
மேலும் அவரு உதவி பண்ணனும்னு அவசியம் இல்லை ஆனால் செய்யக்கூடாத பல விஷயங்கள அவர் பண்ணியிருக்கார்.  நீங்க பண்ணியிருகிங்களா. அவரது ரசிகர் மன்றம் மூலமாக பல உதவிகள் பண்ணியிருக்காங்க. நீங்க இப்படியெல்லாம் சொன்னிங்கனா அப்புறம் ரசிகர்களிடம் இருந்து அசிங்க அசிங்கமான கம்மெண்டுகள் வரவேண்டியிருக்கும், அதனால நீங்க பாதிக்கப்படுவீங்க.
 
உங்க மதிப்ப நீங்களே கெடுத்துக்காதீங்க. விஜயை பற்றி பேச உங்களுக்கு உரிமையில்லை என அந்த ரசிகர் அவரை எச்சரித்துள்ளார். விஜய் ரசிகர் பாஜக தலைவர் வானதி சீனிவாசனை எச்சரிக்கும் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்