தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தாரா கவர்னர்?

செவ்வாய், 22 ஆகஸ்ட் 2017 (00:30 IST)
அதிமுக தொண்டர்களின் விருப்பத்திற்கு இணங்க இன்று ஓபிஎஸ் அணியும், ஈபிஎஸ் அணியும் ஒருங்கிணைந்து ஒன்றுபட்ட அதிமுகவாக உருவாகியது. இதன்படி ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும், மாபா பாண்டியராஜன் அமைச்சராகவும் பதவியேற்றனர். மேலும் தினகரனுக்கு காய்ச்சல் என்பதால் வரும் 23ஆம் தேதி பத்திரிகையாளர்க்ளை சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.



 
 
இந்த நிலையில் இப்போதைக்கு வேறு எதுவும் பிரேக்கிங் நியூஸ் இல்லை என்ற நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் சற்றுமுன் கிடைத்துள்ள புதிய செய்தியின்படி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் அவர்களுக்கு கவர்னர் நாளை காலை 10 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
 
கவர்னரிடம் வெற்றிவேல் எம்.எல்.ஏ என்ன பேசப்போகிறார் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் கிளம்பியுள்ளன. தினகரன் அணிக்கு 16 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்படுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவாரா? அல்லது ஆட்சியை கலைக்கும்படி வலியுறுத்துவாரா? என்பது தெரியவில்லை. இருப்பினும் நாளை காலை 10 மணியில் இருந்து பிரேக்கிங் நியூஸ்களுக்கு பஞ்சமிருக்காது என்பது மட்டும் உண்மை

வெப்துனியாவைப் படிக்கவும்