முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சில அறிவிப்புகளை அடுத்து, அதிமுகவின் இரு அணிகளும் இணையும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஓ.பி.எஸ் தனது ஆதரவாளர்களுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இன்னும் ஓரிரு நாளில் நல்ல முடிவு எட்டப்படும் என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் ஆதரவு வெற்றிவேல் எம்.எல்.ஏ “ஊர் மக்களுக்கு ஒரு கிணற்றை கூட இலவசமாக தர முன்வாராதவர் ஓ.பி.எஸ். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு எதிராக வாக்களித்தவர். இரட்டை இலை முடக்கப்பட்டதற்கும் அவரே காரணம். தற்போது பேரம் படிந்து விட்டது. துபாயில் பணம் செட்டில் ஆகிவிட்டது. எனவே தற்போது இரு அணிகளும் இணைவதாக பேசி வருகிறார்கள்.