அதிகாரம் மக்களின் நலனுக்காக, கார்ப்ரேட்டுக்காக அல்ல... வெற்றிமாறன்!

வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (12:25 IST)
வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநர் வெற்றிமாறன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு. 

 
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகள் கடந்த இரண்டு மாத காலத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இயக்குநர் வெற்றிமாறன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
 
அதில், தங்களது குரலுக்கு செவிசாய்க்கப்படாததன் வெளிப்பாடுதான் மக்களின் போராட்டம். ஆளும் அரசாங்கத்தின் அதிகாரம் மக்களால் வழங்கப்பட்டது. இது மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும். மாறாக கார்ப்ரேட்டின் நலனை சார்ந்து இருக்கக் கூடாது. 
 
விவசாயிகள் தேசத்தின் ஆன்மாவை பாதுகாக்க முயற்சிக்கின்றனர். அவர்களின் உரிமைக்காக போராடுவதும், போராட்டத்திற்கு துணை நிற்பதுமே ஜனநாயகம் என்று பதிவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்