ஈழப்போரின்போது எங்கே சென்றார் பச்சை தமிழன் ரஜினி: வேல்முருகன்

வெள்ளி, 19 மே 2017 (23:10 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து எந்த நேரத்தில் பேச  ஆரம்பித்தாரோ, அந்த நேரம் முதல் தமிழகத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தமிழக அரசியல் களத்தில் எளிதில் வெற்றி வாகை சூடிவிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருந்த சின்னசின்ன கட்சிகளுக்கு ரஜினியின் அறிவிப்பு பேரிடியாய் இறங்கியுள்ளது. எனவே அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று நேரடியாகவும், மறைமுகமாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



 


அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது ஆவேச கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

வேல்முருகன் கூறியதாவது: தமிழக அரசியல் குறித்தோ, மக்களின் வாழ்வாதார பிரச்னை குறித்தோ ரஜினிக்கு புரிதல் கிடையாது. இன்று பச்சைத்தமிழன் என்று சொல்லும் ரஜினி ஈழப்போரின்போது என்ன செய்தார்? நடிகர் ரஜினிகாந்த் அரியாசனத்துக்காக கனவு காண்கிறார், அது ஒரு நாளும் பலிக்காது. இன்றைய இளைஞர்கள் ரஜினியை அரசியல்வாதியாக ஏற்கும் நிலையில் இல்லை, அவர் திரை நட்சத்திரமாகவே தொடருவதே நல்லது. இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்